CRIME
“வெளியே சொன்னா போட்டோ வைரலாயிடும்…” சிறுமியை சீரழித்து அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டிய கும்பல்… காதலனுடன் நின்ற பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த நள்ளிரவு கொடூரம்..!!
நெல்லை மாநகர் பகுதியில் வசிக்கும் தம்பதியினரின் 17 வயது மகள் டவுனில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தந்தை பங்குச்சந்தையிலும், தாயார் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று பேட்டை மலையாள மேடு அருகே நள்ளிரவில் சிறுமி தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை மிரட்டி தாக்கியுள்ளது. பின்னர் அந்த சிறுமியை தங்களது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி மயக்கமடைந்த நிலையில், அவர் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் காதலனின் செல்போனை அந்த கும்பல் பறித்துச் சென்றது. மேலும், செல்போனில் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, வெளியே சொன்னால் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சஞ்சய் சேகர் உத்தரவின்பேரில், நெல்லை டவுண் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு தொந்தரவு நடந்தது உறுதி செய்யப்பட்டது. மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, பெற்றோரிடம் சொல்ல பயந்து உடல்நிலை சரியில்லை எனக் கூறி 10 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், டவுன் தென் பத்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) மற்றும் 17, 14 வயதுடைய 2 சிறுவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதில் 14 வயது சிறுவன் மீது ஏற்கனவே கொலை வழக்கு இருப்பதும், அவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதையடுத்து சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று கொலை வழக்குகளில் தொடர்புடைய சுரேஷிடம் இருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நகை மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் செல்போனை ஆய்வு செய்ததில் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா என்றும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்தவும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போது பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால், உண்மையான விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
