CRIME
“இதை வெளியில் சொல்லக் கூடாது..” தனிமையைப் பயன்படுத்தி 11 வயதுச் சிறுமியிடம் அத்துமீறிய 45 வயது காம கொடூரன்.. நள்ளிரவில் கதறி அழுத மகள் சொன்ன வார்த்தையால் உறைந்து போன தாய்..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தாராபுரம் வடக்குப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் 45 வயதான ஹாருன் ரஷீத். ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவர், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் கீழ்தளத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில், அந்தக் குழந்தைகள் ஹாருன் ரஷீத்துடன் சகஜமாகப் பேசிப் பழகி, அவரது வீட்டிற்குச் சென்று விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்தளத்தில் வசிக்கும் 11 வயது சிறுமி வழக்கம் போல ஹாருன் ரஷீத்தின் வீட்டிற்குச் சென்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ரஷீத், அந்தச் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது எனச் சிறுமியை மிரட்டித் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ச்சியான இந்தக் கொடுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அச்சமடைந்த சிறுமி, நவம்பர் 22-ஆம் தேதி இரவு தனது தாயிடம் நடந்த சம்பவங்களைக் கூறி கதறி அழுதுள்ளார்.
சிறுமியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த தாய், உடனடியாக அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் ஹாருன் ரஷீத்தைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஹாருன் ரஷீத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்; தவெக நிர்வாகி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தச் சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
