“மாமா தான் தம்பியை கொன்னாரு..” 6-வது மாடி ஜன்னல் அருகே கேட்ட ‘அந்த’ கொடூரக் குரல்…. 9 வயது சிறுமி உடைத்த பகீர் ரகசியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மாமா தான் தம்பியை கொன்னாரு..” 6-வது மாடி ஜன்னல் அருகே கேட்ட ‘அந்த’ கொடூரக் குரல்…. 9 வயது சிறுமி உடைத்த பகீர் ரகசியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள பஹெலீவ்லர் பகுதியில், 8 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், அவனது சொந்த மாமாவே அவனைக் கொலை செய்தார் என்ற அதிர்ச்சித் தகவல் குற்றப்பத்திரிகையில் வெளியாகியுள்ளது. சியாவஸ்பாசா குடியிருப்பில் நடந்த இச்சம்பவத்தில், 8 வயதான ஓகுசான் மோகோல் என்ற சிறுவன் 6-வது மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இது ஒரு விபத்து என்று ஆரம்பத்தில் கருதப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையின் போது அந்தச் சிறுவனின் 9 வயது மூத்த சகோதரி அளித்த சாட்சியம் ஒட்டுமொத்த வழக்கையும் தலைகீழாக மாற்றியுள்ளது.

அந்தச் சிறுமி காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது 24 வயது மாமாவான முஸ்தபா உகுர் ஜன்னல் அருகில் அமர்ந்து ஓகுசானை மடியில் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது மாமா ஓகுசானைப் பார்த்து, “உன்னை நான் கீழே தூக்கி எறியட்டுமா?” என்று கேட்டதாகவும், அதற்கு தம்பி பயந்து அழுதபோதும், தான் “என்ன செய்கிறீர்கள்?” என்று கத்துவதற்கு முன்பாகவே மாமா தம்பியை ஜன்னலுக்கு வெளியே கொடூரமாகத் தூக்கி வீசியதாகவும் அந்தப் பச்சிளம் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் நடந்த உடனேயே அத்தை ஓகுசான் எங்கே எனக் கேட்டதற்கு, மாமா “அவன் தூங்குகிறான்” எனப் பொய் சொன்னதாகவும், தான் உடனே “பொய் சொல்லாதே, மாமாதான் தம்பியை ஜன்னல் வழியே தூக்கிப் போட்டார்” என்று அத்தையிடம் உண்மையை உடைத்ததாகவும் சிறுமி விவரித்துள்ளார்.

Advertisement

இதைவிடக் கொடுமையாக, இந்த உண்மை யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அந்தச் சிறுமியின் சொந்த தாய், தாத்தா மற்றும் மாமா ஆகிய மூவரும் சேர்ந்து, “இந்த உண்மையை யாரிடமாவது சொன்னால், உன் பாட்டி, உன் அப்பா மற்றும் நீ என அனைவரும் அழிந்து போவீர்கள்; இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்” என்று மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். எனினும், தடய அறிவியல், சிசிடிவி காட்சிகள், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் சிறுமியின் உறுதியான சாட்சியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, பஹெலீவ்லர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றவாளியான மாமா முஸ்தபாவுக்கு “சிறுவனைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த” குற்றத்திற்காக அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்கக் கோரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in