CRIME
“நீங்க என்னிடம் ரூ.20,000 லஞ்சம் கேட்டீங்க!..” நடுவீட்டில் கத்திய பெண்.. அடுத்த நொடியே போலீஸ் செய்த அதிரடி அராஜகம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒரு பெண்ணைக் கன்னத்தில் அறையும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது. கங்கா காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் இந்த அராஜகச் சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில், சப்-இன்ஸ்பெக்டர் அந்தப் பெண்ணை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டி, கையை ஓங்கித் தாக்குவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நீங்கள் என்னிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டீர்கள்” என்று அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கத்தும் அதிர்ச்சி உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சட்டவிரோதமாக அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து, லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் பேசித் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் துணிகரச் சம்பவம் குறித்து உன்னாவ் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
