LATEST NEWS
“அய்யயோ.. வீட்டின் முன்பு விளையாடிய சிறுவன்.. ஓடிவந்து தூக்கி வீசிய வெறிமாடு.. பார்ப்பவர்களை உறைய வைக்கும் அதிர்ச்சி CCTV..!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் அர்ஜுன்கஞ்ச் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மாடு ஒன்று திடீரென கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை, வேகமாக ஓடிவந்த மாடு முட்டித் தள்ளி, தரையில் வீழ்த்தித் தாக்கியுள்ளது சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மாட்டை விரட்டி அச்சிறுவனை மீட்டுள்ளனர்.
காயமடைந்த சிறுவன் உடனடியாக லக்னோ சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கால்நடைகள் இப்படி தடையின்றி உலாவுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
