LATEST NEWS
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. வந்தாச்சு தீபாவளி பரிசு.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!
தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்குப் பண்டிகை காலத்தை முன்னிட்டு முதல்முறையாகரூ .20,000 வரை தீபாவளி முன்பணம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ. 50 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடு திட்டத்தையும் அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவங்கியுடன் இணைந்து ‘கார்ப்பரேட் ஊதிய பேக்கேஜ்’ திட்டத்தைச் செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க சலுகைகள் ஊழியர்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அதிரடி மற்றும் சிறப்பான முடிவினால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 22,877 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நேரடியாகப் பயனடைய உள்ளனர். இந்த கார்ப்பரேட் ஊதிய கணக்குத் திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்குக் காப்பீடு மட்டுமின்றி, பல்வேறு வங்கிச் சலுகைகளும் எளிதாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் வரலாற்றிலேயே ஒப்பந்தப் பணியாளர்களுக்கு இத்தகைய பெருந்தொகை முன்பணமாகவும், மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டமாகவும் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால், டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
