LATEST NEWS
“எதிர்க்கட்சி தபால் வாக்குகளை எப்படி வாங்கினாங்க தெரியுமா..?” வெக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் வெடித்த புது குண்ட.. தமிழக அரசியலில் புதிய சர்ச்சை..!!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ள மரகதம் குமரவேல், தபால் வாக்குகளை எதிர்க்கட்சிகள் பணம் கொடுத்து வாங்கியதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தபால் வாக்குகள் அனைத்தும் முழுமையாகப் பணம் கொடுத்துதான் வாங்கப்பட்டுள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்று கூறினார். அதே வேளையில், வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூடக் கொடுக்காமல் தவெக இந்தத் தேர்தலில் மிக நேர்மையாகப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வாக்காளர்களைக் கவர்வதற்காகப் பணம், புடவை மற்றும் பல்வேறு பொருட்களை வாரி வழங்கியதாக அவர் சாடினார். இத்தகைய முறைகேடுகளையும் மீறி மக்கள் தங்கள் பக்கம் நின்றதால் தவெக வெற்றி பெற்றுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் இந்தத் தில்லுமுல்லு காரியங்களால் தான் தங்களால் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாமல் போனது என்றும் மரகதம் குமரவேல் தனது பேட்டியில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
