“அந்த ஒரு சந்தேகம்..” சொந்த தம்பியையே கொடூரமாகக் கொன்ற அண்ணன்.. கயிறுகளால் கட்டப்பட்டு தண்ணீர்க் குழிக்குள் கிடந்த சடலம்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அந்த ஒரு சந்தேகம்..” சொந்த தம்பியையே கொடூரமாகக் கொன்ற அண்ணன்.. கயிறுகளால் கட்டப்பட்டு தண்ணீர்க் குழிக்குள் கிடந்த சடலம்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில், அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, பிஜேந்திர சிங் என்ற வாலிபர் அவரது சொந்த சகோதரராலேயே நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்திற்குள் ஏற்பட்ட இந்தத் தகராறு மற்றும் சந்தேகத்தின் உச்சகட்டமாக இந்த பயங்கரக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட பிஜேந்திர சிங்கின் உடல், கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் தண்ணீர் நிரம்பிய ஒரு குழிக்குள் இருந்து காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தம்பியைத் தீர்த்துக்கட்டிய பிறகு உடலை மறைப்பதற்காகப் பாழடைந்த தண்ணீர் குழியில் வீசிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பிரதாப்கர் போலீசார், கொலையாளியான அண்ணன் மற்றும் அவரது நண்பர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in