CRIME
ஐயோ கடவுளே.. கல்லூரி மாணவியை நடுரோட்டில் வைத்து சரமாரியாகத் தாக்கிய வாலிபர்… போலீஸ் கொடுத்த ‘அதிரடி’ ட்ரீட்மென்ட்.. நொண்டி நொண்டி நடக்கும் பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாகேத் காலனியில், புர்கா அணிந்திருந்த கல்லூரி மாணவியை ஃபர்மான் என்ற வாலிபர் சரமாரியாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகேத் காலனி சந்து பகுதியில் அந்த மாணவி நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த ஃபர்மான், அவருடன் ஏதோ பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து, பொதுவெளி என்றும் பாராமல் அந்த மாணவியின் கன்னத்தில் இடது மற்றும் வலது புறமாக அவர் அடுக்கடுக்காகப் பளார் பளார் என அறைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உடனடியாகச் செயல்பட்ட சிவில் லைன்ஸ் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர், காவல் நிலையத்திலிருந்து குற்றவாளியைக் கூட்டிச் செல்லும்போது அவர் நொண்டி நொண்டி நடப்பது போன்ற ‘லிம்பிங் வீடியோ’ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் குற்றவாளிக்குக் கிடைத்த உடனடி பாடம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
