LATEST NEWS
“தாய்மாமன் தாலியறுப்பு திட்டம்” தமிழ்நாடெங்கும் படுஜோரா நடக்குது.. தவெக அரசை கடுமையாக சாடிய திமுக ஐடி விங்..!!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தகவல் தொழில்நுட்ப அணி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தற்போதைய தமிழக அரசை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளது. மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, பெண்கள் தங்களின் நகைகளை எல்லாம் வங்கியிலோ அல்லது வீட்டிலோ பத்திரமாகப் பூட்டி வைப்பதே நல்லது என்று அது காரசாரமாகப் பதிவிட்டுள்ளது.
இந்த விமர்சனத்திற்கு முக்கியக் காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் நடந்த ஒரு செயின் பறிப்புச் சம்பவம் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. செங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அரசு செவிலியர் ஒருவர், மாலை தன் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரது முகத்தைத் துணியால் அழுத்தி அவரிடமிருந்த 18 சவரன் தாலிச் செயினைப் பறித்துச் சென்றுள்ளார். இந்தத் துணிகரச் சம்பவத்தை முன்வைத்து திமுக ஐடி விங் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ கிண்டல் செய்யும் விதமாக, தற்போது தமிழ்நாடெங்கும் படுஜோராக “தாய்மாமன் தாலியறுப்பு திட்டம்” தான் நடந்து கொண்டிருக்கிறது என திமுக ஐடி விங் சாடியுள்ளது. மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வக்கில்லாத ‘சோப்ளாங்கி முதலமைச்சர்’ அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருப்பதால், இனி “தாய்மாமன் கவரிங் செயின் திட்டத்தை” தொடங்கலாம் என்றும் அந்தப் பதிவில் மிகக் கடுமையான வார்த்தைகளால் எள்ளி நகையாடப்பட்டுள்ளது
