CRIME
“சங்கிலியைக் கொடு, இல்லையென்றால்…” பெண்னின் கழுத்தில் கத்தியுடன் மிரட்டிய ஹெல்மெட் கொடூரன்.. இறுதியில் நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. வைரல் வீடியோ..!!
பெங்களூரு இந்திராநகரில் உள்ள டோமலூர் 100 அடி சாலையில், கடை ஒன்றில் தனியாக இருந்த பெண் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அக்டோபர் 31 அன்று நடந்துள்ளது. ஹெல்மெட் மற்றும் கையுறைகள் அணிந்து கடைக்குள் நுழைந்த பிரபுராஜ் (40) என்ற நபர், அந்தப் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து, சங்கிலியைக் கொடுக்காவிட்டால் தொண்டையை அறுத்துவிடுவதாகக் கொடூரமாக மிரட்டியுள்ளார். ஆபத்தான இந்தச் சூழலில் அந்தப் பெண் கூச்சலிடவே, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பொது மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
பொது மக்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டதை உணர்ந்த அந்த நபர், பெண்ணை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றார். இருப்பினும், அங்கிருந்த உள்ளூர் மக்கள் சாதுரியமாகச் செயல்பட்டு அவரது கவனத்தைத் திசைதிருப்பி, அவரை மடக்கிப் பிடித்து பெண்ணைப் பத்திரமாக மீட்டனர். மக்கள் உதவாமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்பதால், பொது மக்களின் இந்தச் சுறுசுறுப்பான நடவடிக்கை பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. பிடிபட்ட அந்தப் பிரபுராஜை பொதுமக்கள் இந்திராநகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
