வாயை பொத்தி.. மூச்சை அடக்கி.. பாசமாய் பழகிய மனைவியை பஸ்பமாக்கிய கணவன்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..! – cinefeeds
Connect with us

CRIME

வாயை பொத்தி.. மூச்சை அடக்கி.. பாசமாய் பழகிய மனைவியை பஸ்பமாக்கிய கணவன்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!

Published

on

ஆந்திரப் பிரதேசம் விஜயநகரம் மாவட்டத்தில், 10 ஆண்டுகள் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மனைவியைப் பண ஆசைக்காகக் கணவனே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கனிமேர்கா கிராமத்தைச் சேர்ந்த புங்கா சந்தியா என்பவரும், ராம் முத்யாலா ராவ் என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு சிறிய குழந்தைகள் உள்ள நிலையில், ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாகப் பணத் தட்டுப்பாடு காரணமாகக் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

கணவன் முத்யாலா ராவ் தொடர்ந்து சந்தியாவை அடித்துத் துன்புறுத்தியதுடன், அவரது பெற்றோர் வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார். மகள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகச் சந்தியாவின் தாயார் பலமுறை பண உதவி செய்தும், கணவனின் பேராசை அடங்கவில்லை. இந்தச் சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை சந்தியா தனது வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்துள்ளார். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சந்தியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், படாபல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

Advertisement

உடற்கூறாய்வு அறிக்கையில், சந்தியாவின் மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவரது மூக்கையும் வாயையும் பலவந்தமாக அமுக்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார் என்பதும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, போலீசாரின் அதிரடி விசாரணையில் கணவன் முத்யாலா ராவ் தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்துக் கொடூரக் கொலைக் குற்றத்திற்காக அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in