LATEST NEWS
அய்யோ காப்பாத்துங்க… சுவருக்கு நடுவுல இருந்து கேட்ட அலறல் சத்தம்! போய் பார்த்த ஊர் மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… 70 வயது முதியவருக்கு நேர்ந்த விபரீதம்..!!
மகாராஷ்டிர மாநிலம் பால்கரைச் சேர்ந்த வினோத் விஷ்ணு ஜாதவ் (70) என்ற முதியவர், ஒரு அடிக்கும் குறைவான அகலம் கொண்ட இரண்டு வீடுகளின் சுவர்களுக்கு இடையில் நேற்று காலை எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். வினோத் ஜாதவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவரைத் தேடி அலைந்தனர். அப்போது, இரண்டு வீடுகளுக்கு இடையே குறுகிய இடைவெளியில் இருந்து முதியவரின் அலறல் மற்றும் கூச்சல் சத்தம் கேட்டுள்ளது.
குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் சென்று பார்த்தபோது, அவர் இரண்டு சுவர்களுக்கு இடையே நகரக் கூட முடியாமல் மிக மோசமாகச் சிக்கியிருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் அவரை நேரடியாக மீட்க முயன்றும், இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் அது தோல்வியில் முடிந்தது. அதன்பின்னர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பால்கர் தீயணைப்பு குழுவினர், முதியவரை அந்தச் சிறிய இடைவெளி வழியாக இழுத்து மீட்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தனர். இதையடுத்து ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவரை உடைத்து ஒரு புதிய வழியை உருவாக்கி, சுமார் 2 மணி நேரக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வினோத் ஜாதவை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக பால்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த மீட்பு வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
