CRIME
“ஐயோ கொடுமையே.. திடீரென காணாமல் போன மனைவி, குழந்தைகள்…” புகார் கொடுத்த கணவர்.. தேடிச் சென்ற போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் புதூர் மண்டலத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பெற்ற தாயே தனது இரு குழந்தைகளைக் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, தானும் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட கொடூரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமநூர்த்தி கிராமத்தைச் சேர்ந்த ராஜு என்பவரின் மனைவி மமதா என்ற பத்மாம்பா (30). இவர்களுக்கு சாகேத் (8) என்ற மகனும், ஜனஸ்ரீ (4) என்ற மகளும் இருந்தனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மமதா தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு திடீரென வெளியேறியுள்ளார். காணாமல் போன தனது குடும்பத்தினரை கணவர் ராஜு பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அன்றைய தினமே புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர் தேடுதலின் போது, சோமநூர்த்தி கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு விவசாயக் கிணற்றின் கரையில் மமதாவின் பை மற்றும் குழந்தைகளின் காலணிகள் கிடப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, நீச்சல் வீரர்களின் உதவியுடன் கிணற்றில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் முதலில் தாய் மற்றும் மகளின் உடல்களும், அதன் பின்னர் மகனின் உடலும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. கணவருடன் ஏற்பட்ட சண்டையே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என போலீசார் சந்தேகிக்கப்படும் நிலையில், மமதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
