LATEST NEWS
“அடிச்ச அடியில மொத்தமும் போச்சு..!” கொத்தனாரின் பிரேக் டிசைன் ஐடியாவால் நேர்ந்த விபரீதம்.. ஆத்திரத்தில் உரிமையாளர்.. இணையத்தில் வைரலாக சம்பவம்..!!
சுமார் 80,000 ரூபாய் மதிப்புள்ள டஃப்பண்ட் கிளாஸ் ஒன்றில் ‘பிரேக் டிசைன்’ செய்ய முயன்ற கொத்தனாரின் விசித்திரமான யோசனை, மொத்தக் கண்ணாடியையும் நொறுக்கி உரிமையாளருக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் விலையுயர்ந்த அந்தக் கண்ணாடியை வாங்கி வந்து, அதில் விரிசல் விழுந்தது போன்ற ஒரு நவீன வடிவமைப்பு செய்ய வேண்டும் என்று கொத்தனாரிடம் கூறியுள்ளார். டஃப்பண்ட் கண்ணாடியில் அத்தகைய வடிவமைப்பை உருவாக்குவதற்காக, அந்தப் மேஸ்திரி ஒரு தவறான தந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், அந்தத் தந்திரம் விபரீதமாக முடிந்து, கண்ணாடியில் வடிவமைப்பு வருவதற்குப் பதிலாக மொத்தக் கண்ணாடியும் தூள் தூளாக உடைந்து சிதறியுள்ளது.
இந்தத் தவறான முயற்சியால் தற்போது அந்த அழகிய வடிவமைப்பும் இல்லை, 80,000 ரூபாய் மதிப்புள்ள அந்தக் கண்ணாடியும் இல்லை என்ற நிலைக்கு உரிமையாளர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர், தனது பணத்தையும் கண்ணாடியையும் பாழாக்கிய அந்த மேஸ்திரியைத் தீவிரமாகத் தேடி வருகிறார். ஆனால், விபரீதத்தை உணர்ந்த அந்த மேஸ்திரி அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டதால், அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் உரிமையாளர் தவித்து வரும் இந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
