இனி கரண்ட் கட்டே ஆகாது.. மின்கம்பியில் ஊர்ந்து சென்று பழுது பார்க்கும் விசித்திர பாம்பு ரோபோ.. எந்த ஊரில் தெரியுமா..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி கரண்ட் கட்டே ஆகாது.. மின்கம்பியில் ஊர்ந்து சென்று பழுது பார்க்கும் விசித்திர பாம்பு ரோபோ.. எந்த ஊரில் தெரியுமா..?!

Published

on

சீனாவில் மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து சென்று அவற்றை ஆய்வு செய்யும் ரோபோ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. யுனான் மாகாணத்தின் குன்மிங் பகுதியில் இந்த ரோபோ மூலம் மின் கம்பிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மின் கம்பியை சுற்றிப்பிடித்தபடி ஊர்ந்து செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ரோபோவில் கேமராக்கள் மற்றும் பல்வேறு உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் மின் கம்பிகளில் ஏற்பட்டுள்ள சேதம், தேய்மானம் மற்றும் அதிக வெப்பம் போன்றவற்றை கண்டறிய முடியும். இந்த ரோபோ இதுவரை 130 கிலோமீட்டருக்கும் அதிகமான மின் வினியோகக் கம்பிகளை ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மேற்கொள்ளும் ஆய்வைவிட 3 மடங்கு வேகமாக பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

பொதுவாக மின் கம்பிகளை ஆய்வு செய்ய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவற்றை பயன்படுத்த முடியாது. இதுபோன்ற பகுதிகளில் மின் கம்பிகளின் மீது நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய இந்த ரோபோ உதவுகிறது. மின் கம்பிகளில் உள்ள தடைகளையும் கடந்து செல்லும் வகையில் ரோபோவின் உடல் நெகிழ்வாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் சென்று ஆய்வு செய்ய சிரமமான இடங்களையும் எளிதாக ஆய்வு செய்ய முடியும். மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை முன்கூட்டியே கண்டறிந்து, மின்சார வினியோகத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த ரோபோ உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in