LATEST NEWS
“நான் இறந்தாலும் என் மருமகளை கைவிட மாட்டேன்..” மருத்துவர்களே கைவிட்ட பிறகும் மாமியார் செய்த ‘அந்த’ ஒரு அதிசயம்.. வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!!
சீனாவில் மனிதநேயத்தின் உச்சமாகவும், மாமியார் – மருமகள் உறவுக்குப் புதிய இலக்கணமாகவும் திகழும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் உலகெங்கும் உள்ள நெட்டிசன்களின் கண்களைக் குளமாக்கியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு திருமணமான ஒரே மாதத்தில், ஜு என்ற இளம் பெண் ஒரு கொடூரமான சாலை விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்களே கைவிட்ட சூழ்நிலையிலும், அவரது மாமியார் ஜுவான் தனது மருமகளைத் தன் சொந்த மகளாகக் கருதி கடந்த 17 வருடங்களாகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பராமரித்து வந்துள்ளார். தினமும் குளிக்க வைப்பது, மசாஜ் செய்வது, உணவு ஊட்டுவது எனத் தாயுள்ளத்தோடு அவர் செய்த தொடர் கவனிப்பின் காரணமாக, 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜு தற்போது கோமாவில் இருந்து மீண்டு, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார்.
“என்னுடைய மருமகளை எப்படி நான் கைவிட முடியும்? ஒருவேளை நான் இறந்துபோனாலும் கூட, என் மகன் அவளைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிப்பான்” என்று ஜுவான் நெகிழ்ச்சியுடன் கூறிய வார்த்தைகள், சுயநலம் மிகுந்த இந்த நவீன உலகில் உண்மையான அன்பின் வலிமையை உணர்த்துகின்றன. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான ஒரு நூலிழைப் போராட்டத்தில், மரணத்தின் விளிம்பில் இருந்த மருமகளைத் தனது எல்லையற்ற பாசத்தால் வழிநடத்தி, மறுவாழ்வு கொடுத்து மீட்டெடுத்துள்ள இந்தத் தாயின் தியாகக் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஒட்டுமொத்த உலகத்தாரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
