CRIME
“நான் பெத்த ஒரு பிள்ளையும் போச்சே” வீட்டில் தனியாக இருந்த மகள்… காத்திருந்து வீட்டுக்குள் சென்ற தந்தை… மனைவி இல்லாத நேரத்தில் கதற கதற நடந்த கொடூரம்..!!
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள தூத் கலான் கிராமத்தில், பெற்ற மகளையே தந்தை ஒருவரே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த பெண் இந்திரப்ரீத் கவுர் (11-ம் வகுப்பு மாணவி) ஆவார். மாணவியின் தாய் வீட்டு வேலைக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் மகள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட தந்தை, அவர் மீது கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறியதால், அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரக் கொலைக்கான காரணம் குறித்துப் பேசிய சிறுமியின் தாய்மாமா மன்பிரீத் சிங், தனது மைத்துனருக்கு ஆரம்பத்திலிருந்தே ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்துவிட்டதே என்ற விரக்தியில் அவர் அடிக்கடி புலம்பி வந்ததாகவும், அந்தப் புத்திர மோகமே இந்தச் ஜகன்னியக் குற்றத்திற்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஹரியானா காவல் நிலைய போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி அடுத்தகட்ட விசாரணைக்காக அனுப்பியுள்ளனர். கொலையைச் செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள அந்தப் பாசமில்லாத தந்தையைத் தேடிப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
