“என்னை யாரும் தொட முடியாது” போக்சோ வழக்கில் சிக்கிய மதபோதகர் ஜான் ஜெபராஜ்.. “காமுகன் மீது நடவடிக்கை எடு” என அனைத்திந்திய திருச்சபை கூட்டமைப்பு கோரிக்கை..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை யாரும் தொட முடியாது” போக்சோ வழக்கில் சிக்கிய மதபோதகர் ஜான் ஜெபராஜ்.. “காமுகன் மீது நடவடிக்கை எடு” என அனைத்திந்திய திருச்சபை கூட்டமைப்பு கோரிக்கை..!!

Published

on

பிரபல கிறிஸ்தவ மதபோதகரும் பாடகருமான ஜான் ஜெபராஜ் மீது இரு மைனர் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கோயம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 மே மாதம் கோவையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகளுக்கு அவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்ததாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவான ஜான் ஜெபராஜைக் கைது செய்யக் கோவை மாநகர காவல் துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பதுங்கியிருந்த அவரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Advertisement

இந்நிலையில், கிறிஸ்தவ மதத்திற்குள் சினிமா மெட்டுகளில் பாடல்களைப் பாடியும் நடனமாடியும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த ஜான் ஜெபராஜ் மீது உரிய மற்றும் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய திருச்சபை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. “என்னை யாரும் தொட முடியாது” என்ற தோரணையில் செயல்பட்டு வந்த இதுபோன்ற நபர்களுக்குச் சட்டத்தின் மூலம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in