அடிப்பாவி..ஜிம் மாஸ்டர் மீது தீராத காதல்.. கணவனைத் தீர்த்துக்கட்ட தபால் துறை அதிகாரி ஸ்கெட்ச் போட்ட மனைவி.. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடிப்பாவி..ஜிம் மாஸ்டர் மீது தீராத காதல்.. கணவனைத் தீர்த்துக்கட்ட தபால் துறை அதிகாரி ஸ்கெட்ச் போட்ட மனைவி.. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் வசுந்தரா பகுதியில், டெல்லி தபால் கணக்கு அலுவலகத்தில் மூத்த கணக்காளராகப் பணிபுரியும் ஷஷாங்க் கந்தாரியா (35) என்பவரை, அவரது மனைவி பிரியா ஷர்மாவே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரியா கடந்த சில மாதங்களாகச் சென்று வந்த உடற்பயிற்சிக் கூடத்தின்பயிற்சியாளரான பிரதாப் சிங் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவரைத் தீர்த்துக்கட்ட இவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர். இவர்களது சட்டவிரோத உறவை அறிந்துகொண்ட கணவர் ஷஷாங்க், தீபாவளிக்குப் பிறகு வீட்டை காலி செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்குள் அவரைக் கொலை செய்ய இந்தச் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி சம்பவம் நடந்த அன்று காலையில், பிரியா தனது காரில் வீட்டை விட்டு வெளியேறும்போது பிரதான நுழைவாயில் கதவைத் திறந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இதனைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்த ஜிம் மாஸ்டர் பிரதாப் சிங், படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த ஷஷாங்கைக் கத்தியால் கொடூரமாகப் பலமுறை குத்தியுள்ளார். ஷஷாங்கின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பாதுகாவலர்களைக் கண்டு கொலையாளி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், படுகாயமடைந்த ஷஷாங்க் யசோதா மெடிசிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார்.

Advertisement

இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்த இந்திராபுரம் போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மனைவி பிரியா காரில் வெளியேறுவதும், அடுத்த சில நிமிடங்களில் ஜிம் மாஸ்டர் பிரதாப் சிங் வீட்டிற்குள் நுழைந்துவிட்டுப் பின் பதற்றத்துடன் வெளியே ஓடுவதும் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், மனைவியான பிரியா ஷர்மா மற்றும் அவரது காதலன் பிரதாப் சிங் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in