CRIME
அய்யோ கடவுளே.. கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்த கார்.. முதிய தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்.. பெண் டிரைவர் செய்த பகீர் காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சிசிடிவி காட்சி..!!
டெல்லியின் கீர்த்தி நகர் பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, தங்களுக்கு முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த முதிய தம்பதியினர் மீது பின்னால் இருந்து பயங்கரமாக மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழிபாட்டுத் தலம் ஒன்றிற்குச் சென்றுவிட்டுத் தங்களது வீட்டின் அருகே அவர்கள் வந்தடைந்த போதுதான், கட்டுப்பாட்டை இழந்த அந்த அதிவேகக் கார் அவர்கள் மீது மோதியுள்ளது. இந்த மோதலின் தாக்கம் எவ்வளவு கொடூரமாக இருந்தது என்றால், காரின் வேகம் தாங்காமல் அந்த முதிய தம்பதியினர் தூக்கி வீசப்பட்டுச் சாலையில் வெகுதூரம் போய் விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. அதில், காரை ஓட்டி வந்த பெண் விபத்து நடந்த சில வினாடிகளிலேயே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் முதிய தம்பதியினரை வேடிக்கை பார்ப்பது போலப் பார்க்கிறார். ஆனால், மனிதாபிமானமே இல்லாமல் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எந்த முயற்சியும் எடுக்காமல், மீண்டும் காரில் ஏறி அந்தப் பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த காரை ஓட்டிய அந்தப் பெண்ணைக் கைது செய்து, விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
