“ரூ.10,000 குடு.. இல்லனா வெளியே போ..!” வலியால் துடித்த ஏழை பெண்ணை துரத்திய அரசு ஊழியர்கள்.. மருத்துவமனை வாசலிலேயே நடந்த பிரசவம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ரூ.10,000 குடு.. இல்லனா வெளியே போ..!” வலியால் துடித்த ஏழை பெண்ணை துரத்திய அரசு ஊழியர்கள்.. மருத்துவமனை வாசலிலேயே நடந்த பிரசவம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

“யோகி ஜி.. அரசு இயந்திரத்தின் ஆன்மாவே செத்துவிட்டது” என்று உத்திரப் பிரதேசத்தின் ரேபரேலியில் அரங்கேறிய அவலம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் கொதிக்க வைத்துள்ளது. அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் பிரசவம் பார்க்கும்படி அவர் வேண்டியபோது, அவர்கள் ரூ.10,000 லஞ்சமாகக் கேட்டுள்ளனர். தாங்கள் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்றும் அந்தப் பெண் உருக்கமாகக் கூறியுள்ளார். ஆனால், சிறிதும் இரக்கமில்லாத அந்த அரசு ஊழியர்கள், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்துத் தள்ளி, மருத்துவமனையை விட்டு வெளியே துரத்தியடித்துள்ளனர்.

பணமும் இன்றி, மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படாமல் தவித்த அந்த ஏழைப் பெண்ணுக்கு, மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் அருகிலேயே பிரசவம் நடந்துள்ளது. அந்தப் பெண் கொளுத்தும் வெயிலிலும், மக்கள் நடமாடும் பாதையிலும் பிரசவ வலியால் துடித்ததும், அங்கேயே குழந்தை பிறந்ததும் சுற்றியிருந்தவர்களைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இந்த மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி, உபி மாநிலத்தின் மோசமான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in