அம்மா..! பள்ளி முடிந்து வந்த குழந்தைகளுக்குக் காத்திருந்த பேரிடி.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்… சிசிடிவி காட்சியால் அவிழ்ந்த திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

அம்மா..! பள்ளி முடிந்து வந்த குழந்தைகளுக்குக் காத்திருந்த பேரிடி.. ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்… சிசிடிவி காட்சியால் அவிழ்ந்த திடுக்கிடும் உண்மை..!!

Published

on

தமிழ்நாட்டை சேர்ந்த அருண்குமார் என்பவரது மனைவி அனிதா. இவர்களது குடும்பம் வேலை நிமித்தம் காரணமாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், ஜில்லல் குடா, தாதுநகர் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்தது. கடந்த புதன்கிழமை அன்று அருண்குமார் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற நிலையில், அனிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அதே அப்பார்ட்மெண்ட்டின் 4-வது மாடியில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவர் கல்லூரி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் வேலையைவிட்ட அவர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாங்கி சுமார் ரூ.4 கோடிக்கும் மேல் கடனாளி ஆனார். கடன் தொல்லை அதிகமானதாலும், அனிதா அதிக நகைகளை அணிந்திருந்ததாலும் அவரது வீட்டில் கொள்ளையடிக்க ராஜ்குமார் திட்டமிட்டார்.

புதன்கிழமை காலை அருண்குமார் மற்றும் குழந்தைகள் வெளியே சென்ற பிறகு, ஹெல்மெட் அணிந்து கொண்டு அருண்குமாரின் வீட்டிற்கு ராஜ்குமார் சென்றார். காலிங் பெல் அடித்ததும் கதவைத் திறந்த அனிதாவை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றுள்ளார். அவர் கத்தி கூச்சலிட்டதால், தான் கொண்டு சென்ற பிளாஸ்திரியை அவரது வாயில் ஒட்டி கை, கால்களைக் கட்டினார். மேலும், தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என்ற பயத்தில் அயன் பாக்சை எடுத்து அனிதாவின் தலையில் பலமுறை தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

அனிதா இறந்ததை உறுதி செய்த ராஜ்குமார் அவர் அணிந்திருந்த தாலி சரடு, கம்மல், வளையல் மற்றும் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். மாலையில் பள்ளி முடிந்து வந்த குழந்தைகள் தாய் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர். தகவலறிந்து வந்த கணவர் அருண்குமார் மற்றும் அப்பகுதி மக்கள் அனிதாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மீர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடனை அடைக்க கல்லூரி பேராசிரியர் ஒருவரே கொலைகாரனாக மாறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in