CRIME
“என் நிலத்தின் பாதையை வித்துட்டாங்க…” நில மாஃபியாக்களின் வெறிச்செயல்.. நடுத்தெருவில் நின்ற ராணுவ வீரரின் கண்ணீர் வீடியோ..!!
நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர் பிரீதம் திவேதி என்பவருக்குச் சொந்தமான நிலத்திற்கான பாதையை நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்து விற்றுவிட்ட அவலம் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் அரங்கேறியுள்ளது. தனது தாயாரின் மருத்துவச் சிகிச்சைக்காக நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் சென்றிருந்த காலகட்டத்தில் இந்தத் துரோகம் நடந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக அவரது தாயார் இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். தாயை இழந்த சோகத்தில் இருந்த அந்த வீரர், தான் கடன் வாங்கி வாங்கிய நிலத்தின் பாதை ஆக்கிரமிக்கப்பட்டு, அதுவும் சிறு நிலங்களாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுவதைக் கண்டு, “தன் தாய்க்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நேரத்தில் தனக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுவிட்டதே” என்று தாளாத துயரத்துடன் தேம்பித் தேம்பி அழுத நெஞ்சை உருக்கும் காட்சி பார்ப்போரை நிலைகுலையச் செய்துள்ளது.
பாரத தாயின் சேவையில் தங்களை அர்ப்பணிக்கும் ஒரு ராணுவ வீரருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி நில மாஃபியாக்கள் செய்த இந்த அக்கிரமத்திற்கு எதிராக அந்த ராணுவ வீரர் நீதி கேட்டுப் போராடி வருகிறார். தாய்நாட்டைக் காக்கும் ஒரு வீரரின் சொந்த நிலத்திற்கும், அவருக்கும் உரிய நீதியை யார் பெற்றுத் தருவார்கள் என்ற ஆதங்கக் குரல் இப்போது வலுத்து வருகிறது.
