LATEST NEWS
“நடுரோட்டில் சினிமாவையே மிஞ்சிய கொடூர சண்டை..” கல் வீசிய எதிரிகள் மீது கார் ஓட்டுநர் செய்த வெறித்தனமான காரியம்.. இறுதியில் நடந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
துருக்கியின் மெர்சின் மாகாணம், அனமுர்மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலின் போது, கார் ஓட்டுநர் ஒருவர் தன்னை நோக்கிப் பாய்ந்த எதிரிகளை நோக்கி வாகனத்தை அதி வேகமாகச் செலுத்தியதில் ஒருவர் மீது கார் மோதியதோடு, கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கட்டுமானப் பள்ளத்திற்குள் தலைகீழாகப் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சண்டையின் போது, ஓட்டுநரை நோக்கிச் சிலர் கற்களை வீசித் தாக்க முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், காரை நிறுத்தாமல் அவர்களை நோக்கி வேகமாக ஓட்டியுள்ளார். இந்த அதிவேக மோதலில் அங்கிருந்த ஒரு நபர் மீது கார் பலமாக மோதி தூக்கி வீசப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நிலைதடுமாறிய கார், சாலையோரம் இருந்த ஒரு கட்டிடத்தின் அடித்தளப் பள்ளத்திற்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த இருவர் படுகாயமடைந்தனர், அவர்கள் இருவரும் அண்ணன்-தம்பி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நடுரோட்டில் சினிமா பட பாணியில் அரங்கேறிய இந்த நெஞ்சைப் பதறவைக்கும் ஒட்டுமொத்த மோதல் மற்றும் விபத்துக் காட்சியும், அங்கிருந்த ஒருவரின் செல்போன் கேமராவில் துல்லியமாகப் பதிவாகி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
