LATEST NEWS
அய்யோ கொடுமையே…! 43-வது மாடியில் இருந்து குதித்த வாலிபர்… துண்டு துண்டாக பிளந்த உடல்.. அலறி அடித்து ஓடிய மக்கள்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டர் 94-ல் உள்ள சூப்பர் நோவா சொசைட்டி கட்டிடத்தின் உச்சியான 43வது மாடியில் இருந்து சம்பவ் ஜெயின் (28) என்ற இளைஞர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருகிராமில் உள்ள மனேசரை சேர்ந்த அவர், தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் ‘ஹோம் ஸ்டே’ முறையில் தங்கி இருந்த அவர், கீழே குதித்த வேகத்தில் அவரது உடல் இரண்டாகப் பிளந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில், சம்பவ் ஜெயின் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதும், பணப் பிரச்சினை, திருமண வாழ்க்கை மற்றும் அவரது ஒரு வயது மகனின் உடல்நலப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடும் மன உளைச்சலில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர் நான்கு நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், அவரது தந்தையுடனான உரையாடல்கள் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளன. மேலும், அவர் கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினரும் தடயவியல் குழுவினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் மேலும் விரிவான விசாரணையை நடத்தி வருகின்றனர்.
