திரையுலகில் பேரிழப்பு..! பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு..!! – cinefeeds
Connect with us

CINEMA

திரையுலகில் பேரிழப்பு..! பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு..!!

Published

on

இந்திய சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாச ராவ் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் (அக்டோபர் 3) இரவு சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 95. அவரின் உடலுக்கு (அக்டோபர் 4) இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள உதயகிரியில் 1931இல் பிறந்தவர் சிங்கீதம் சீனிவாச ராவ். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்ற இவர் சினிமா மீது கொண்ட காதலால் இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் இணை இயக்குநராக தன் பணியை தொடங்கினார். தெலுங்கில் 1972ல் வெளியான ‘நீதி நிஜாயிதி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

Advertisement

இவர் இயக்கிய முதல் தமிழ் படமான ‘திக்கற்ற பார்வதி’ 1974ல் வெளியானது. அந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. கமல் ஹாசனின் கிளாசிக் படங்களான ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், புஷ்பக விமானம், பேசும்படம், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை இயக்கியவர் இவரே. மேலும், சின்ன வாத்தியார், மகளிர் மட்டும், லிட்டில் ஜான் உள்ளிட்ட பல தமிழ் படங்களை இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டிருந்தார். 95 வயதிலும் சினிமாவில் துடிப்புடன் இயங்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், கடைசியாக சிங்கீதம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியானது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in