BREAKING: திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்..!!

Published

on

ஒரத்தநாடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். திமுகவின் டெல்டா மண்டல முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய இவர், 1989, 1996 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்தை அவரது சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டிலேயே எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிவாகை சூடியது இவரது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ராமச்சந்திரனின் மறைவுக்கு திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in