CRIME
“என் மனைவியோட…” நண்பனையே கொன்று புதைத்த கொடூரம்..! ராதிகா வீட்டு பணிப்பெண் மகன் மரணத்தில் ட்விஸ்ட்..!!
நடிகை ராதிகா வீட்டின் பணிப்பெண் மகனான 19 வயது பிரசாந்த் மரணமடைந்த விவகாரத்தில், பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கைதான தேவராசு அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்த காரணத்தினால் நண்பரான பிரசாந்தை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
பிரசாந்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்த தேவராசு, அவரை மது குடிக்கலாம் வா என அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மற்றொரு நண்பரான தினேஷுடன் சேர்ந்து பிரசாந்தைக் கொலை செய்து, அவரது உடலை புதைத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
