CRIME
ராதிகா வீட்டுப் பணிப்பெண்ணின் மகனுக்கு நேர்ந்த கொடூரம்..! தாயைப் பார்க்கச் சென்ற வாலிபர் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு… பின்னணியில் பகீர் காரணம்..!!
கெடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுவத்தூரைச் சேர்ந்த ரமேஷ் – எழில் செல்வி தம்பதியின் 19 வயது மகன் பிரசாந்த் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது தாயார் எழில் செல்வி, சென்னையில் நடிகர் சரத்குமார் – ராதிகா வீட்டில் பணிபுரிந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டைல்ஸ் வேலை செய்து வந்த பிரசாந்த், கடந்த 27ஆம் தேதி சென்னையில் உள்ள தனது தாயைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், மீண்டும் வீடு திரும்பாததால் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து செல்போன் டவர் லொகேஷன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த தேவராசு (18), தினேஷ் (23) ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
இதில், நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிரசாந்தை பொன்னேரி கடற்கரைப் பகுதிக்கு வரவழைத்து அடித்துக் கொலை செய்து புதைத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
