CRIME
இமைப்பொழுதில் மாறிய விதி.. சிறுநீர் கழிக்க காரில் இருந்து இறங்கிய சிறுவன்.. திரும்பி பார்த்த போது பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!!
கொலம்பியா நாட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே, இமைப்பொழுதில் தலைகீழாக மாறிய நெஞ்சைப் பதறவைக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. அந்தப் பயணத்தின் போது சிறுவன் ஜூலியோ சிறுநீர் கழிப்பதற்காக சாலையோரம் இறங்கிய சில நொடிகளில், எதிர்பாராத விதமாக பிரேக் செயலிழந்த லாரி ஒன்று அவர்கள் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அவனது பெற்றோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; ஜூலியோவின் தம்பி மட்டுமே இந்த விபத்தில் அற்புதமாக உயிர் பிழைத்தான்.
விபத்தை விட பெரும் துயரமாக, விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே, அந்தப் பெற்றோர் இறந்த சோகத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சிலர் அவர்களின் கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர். குடும்பமே அழியக் காரணமான விபத்தில் தம்பியும் ஜூலியோவும் உயிர் பிழைத்த போதிலும், பெற்றோரை இழந்து தவிக்கும் அந்தப் பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய மனிதர்களில் சிலர், அவர்களின் பேரிடரைப் பயன்படுத்தி திருடச் சென்றது மனிதநேயமற்ற கொடுமையின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.
