CRIME
நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட 8 வைத்து சிறுமி.. காட்டுக்குள் நடந்தது என்ன..? மரண பயத்தில் உறைந்த பழங்குடியின கிராமம்..!!
கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில் உள்ள நுயேவோ பெலன் டி பஜிரா பழங்குடியினப் பாதுகாப்புப் பகுதியில், 8 வயது சிறுமி ஒருத்தி உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காடுகளுக்கு அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அந்தச் சிறுமியின் உடலில் கடுமையான கடித்த மற்றும் நகக் கீறல் காயங்கள் இருந்தன. சிறுமியின் இந்த அகால மரணம் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மத்தியில் மிகப்பெரிய மரண பயத்தையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கொலம்பியா நாட்டின் வனத்துறை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அச்சிறுமி ஜாகுவார் எனப்படும் சிறுத்தை போன்ற பெரிய காட்டுப் பூனை வக விலங்கின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தாளா அல்லது வேறு ஏதேனும் கொடூர விலங்கு அவளை வேட்டையாடியதா என்ற கோணத்தில் தீவிர புலனாய்வு நடந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த பயங்கரம் நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.
