CRIME
நடுக்கமூட்டும் பயங்கரம்.. மாயமான 7 வயது சிறுவன் பாழடைந்த ஓட்டு வீட்டில் பிணமாக மீட்பு.. உடலில் கொடூர காயங்கள்… திடுக்கிடும் பின்னணி..!!!
மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்த 7 வயது சிறுவன், வீட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் திடீரென மாயமானதைத் தொடர்ந்து குடும்பத்தினரும் உறவினர்களும் பல இடங்களில் தேடி அலைந்த நிலையில், இன்று வீட்டின் அருகிலேயே உள்ள பாழடைந்த வீட்டில் அவன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
மீட்கப்பட்ட சிறுவனின் உடலில் ஆங்காங்கே பலத்த காயங்கள் இருப்பதாக அவனது உறவினர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது சாதாரண மரணம் அல்ல, யாரோ திட்டமிட்டுக் கடத்திக் கொலை செய்துள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டானா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
