CRIME
அடக்கொடுமையே.. சுடுதண்ணீர் எடுக்க முயன்ற மனைவிக்கு நேர்ந்த விபரீதம்.. திருமணமான 2 ஆண்டுகளில் நடந்த கொடூரம்.. பகீர் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் போரபண்டா பாரத் நகரில், வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரைச் சூடாக்க முயன்ற போது நேரிட்ட மின்சார விபத்தில் ஆயிஷா சித்திக் (26) என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாரத் நகரில் உள்ள உஸ்மான் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த ஆயிஷா, வாளியில் சுடுதண்ணீர் இருக்கும்போது ஸ்டீல் குவளையைப் பயன்படுத்தித் தண்ணீரை எடுக்க முயன்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரிலிருந்து வாளித் தண்ணீரில் பரவியிருந்த மின்சாரம் எதிர்பாராத விதமாக அவர் மீது பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. விபத்து நடந்த சமயத்தில் அவரது கணவர் அப்துல் ரவூப் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.
இறந்த ஆயிஷா சித்திக்கிற்குத் திருமணமாகி வெறும் இரண்டு ஆண்டுகளே ஆகும் நிலையில், அவருக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த போரபண்டா போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வயதுக் குழந்தையைத் தவிக்க விட்டு இளம் தாய் மின்சாரம் தாக்கிப் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
