LATEST NEWS
“என் கணவர் கோழையல்ல!” செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி கண்ணீர் பேட்டி.. பெரும் பரபரப்பு..!!
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் நடந்த இந்த மர்ம மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், பாலகிருஷ்ணனின் மனைவி சுதா செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார். அதில், தனது கணவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குக் கோழையல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்குள் தனது கணவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மை வெளிவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதற்காகத் தனது கணவரைக் காவல் நிலையத்தில் வைத்திருந்தீர்கள் என்றும், அவர் அங்கு இருக்க வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்றும் சுதா கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ள அவர், தனது கணவரின் மரணத்திற்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
