LATEST NEWS
திருமண நாளில் நடந்த திகில் விபத்து.! பறந்து வந்த பூங்கொத்தால் வயலில் கவிழ்ந்த திருமண கார்… ஆனால் அடுத்து நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!
வடக்கு வியட்நாமின் துயென் குவாங் (Tuyen Quang) மாகாணத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தின் போது எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாக, பூங்கொத்து ஒன்று பறந்து வந்து மணமக்கள் பயணித்த காரின் முன்பக்கக் கண்ணாடியை முழுவதுமாக மறைத்தது. இதனால் ஓட்டுநரின் பார்வை மறைக்கப்பட்டு, கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த சேறு நிறைந்த நெல் வயலுக்குள் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக ஒன்றிணைந்து மீட்புப் பணியில் இறங்கினர். சேற்றில் புதைந்திருந்த காரை அனைவரும் சேர்ந்து தங்களது கைகளால் உயர்த்திப் பிடித்து, காருக்குள் சிக்கியிருந்த மணமக்களைப் பத்திரமாக வெளியே மீட்டனர்.
விபத்தின் போது மணமகள் கர்ப்பிணியாக இருந்ததால் அங்கிருந்தவர்களிடையே பெரும் பதற்றம் நிலவியது. இருப்பினும், நல்வாய்ப்பாக மணமகளுக்கும் வயிற்றிலிருந்த குழந்தைக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் இருவரும் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எந்தத் தடையுமின்றித் திட்டமிட்டபடி அவர்களது திருமணச் சடங்குகள் இனிதே நடந்தேறின.
