“18 பக்க உருக்கமான கடிதம்”… சாதி மறுப்பால் காதலன் செய்த துரோகம்.. போலீஸ் அதிகாரியாக வேண்டிய இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“18 பக்க உருக்கமான கடிதம்”… சாதி மறுப்பால் காதலன் செய்த துரோகம்.. போலீஸ் அதிகாரியாக வேண்டிய இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

Published

on

தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் நதிவாடா கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சுஷ்மிதா, காவல்துறை பணியில் சேருவதற்காகத் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இவரும் அனில் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சுஷ்மிதாவைத் திருமணம் செய்து கொள்வதாக அனில் முன்பு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது சாதி வேறுபாட்டைக் காரணம் காட்டித் திருமணத்திற்கு மறுத்ததாகத் தெரிகிறது.

காதலன் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்ததால் சுஷ்மிதா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் மனமுடைந்த அவர், தனது தற்கொலைக்கான காரணங்களை விவரித்து 18 பக்கக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இளம்பெண்ணின் இந்த மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், சுஷ்மிதா எழுதிய 18 பக்கக் கடிதத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில், காதலன் அனில் உள்ளிட்ட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in