“குழந்தை பிறந்த பிறகு திருமண உதவித்தொகை..!” எம்.எல்.ஏ. செயலால் வெடித்த சர்ச்சை.. கொந்தளித்த மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குழந்தை பிறந்த பிறகு திருமண உதவித்தொகை..!” எம்.எல்.ஏ. செயலால் வெடித்த சர்ச்சை.. கொந்தளித்த மக்கள்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஜக்தியாலில் நடைபெற்ற கல்யாண லட்சுமி திட்டத்தின் கீழ் காசோலை வழங்கும் நிகழ்ச்சியில், திருமணமாகி குழந்தை பெற்ற பெண்ணுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஞ்சய் காசோலையை வழங்கிய சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திருமணத்தின் போது ஏழைப் பெண்களுக்கு உதவும் வகையில் வழங்கப்பட வேண்டிய இந்த நிதியுதவி, காலதாமதமாகப் பெண் குழந்தையைப் பெற்ற பிறகு வழங்கப்படுவது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தேர்தல் வாக்குறுதியின்படி பெண்களுக்குத் தங்கம் வழங்கவில்லை என்ற அதிருப்தி ஏற்கனவே நிலவி வரும் நிலையில், குறைந்தபட்சம் இந்தக் காசோலைகளையாவது உரிய நேரத்தில் வழங்க வேண்டும் எனப் பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் காங்கிரஸ் அரசை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in