CRIME
“ஐயோ கடவுளே.. ஒரு ஆபாசப் போட்டோவுக்காக இப்படியா..?” ஹனி டிராப் வலையில் விழுந்த அதிகாரி… 3,000 வாட்ஸ்அப் மெசேஜ்களால் அம்பலமான பகீர் தேசத்துரோகம்.. அதிர்ச்சி பின்னணி..!!
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய பெண் ஒருவர் அனுப்பிய ஆபாச புகைப்படங்களுக்குப் பதிலாக, இந்திய விமானப்படையின் முக்கியப் போர் ரகசியங்களை அதிகாரி ஒருவர் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது. இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றிய அந்த அதிகாரி, கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை பாகிஸ்தான் உளவாளியுடன் வாட்ஸ்-அப் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண் அனுப்பிய ஒவ்வொரு ஆபாச புகைப்படத்திற்கும் பதிலாக, விமானப்படையின் ரகசிய போர் திட்ட ஆவணத்தின் ஒரு பக்கத்தை அனுப்பித் தருவதாக அவர் உறுதியளித்துப் பகிர்ந்துள்ளதாக டெல்லி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர்பின் மூலம், இந்திய விமானப்படையின் ரகசிய டிரோன் பிரிவின் எண்ணிக்கை, கட்டமைப்பு, ஆயுதங்களை இலக்கு நோக்கிச் செலுத்தும் தொழில்நுட்பம், லே பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்களின் விவரங்கள் மற்றும் ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் நடைபெற்ற ராணுவப் பயிற்சிகள் குறித்த முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன. இதுமட்டுமின்றி, பாகிஸ்தான் உளவாளி அனுப்பிய இணையதள இணைப்புகள் மற்றும் செயலிகள் மூலமாக, தனது கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றிய 5 அதிகாரிகளின் மின்னணு சாதனங்களில் உளவு மென்பொருட்களை நிறுவவும் அவர் உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த அதிகாரியின் செல்போனை ஆய்வு செய்ததில், உளவாளியுடன் 3,008 குறுஞ்செய்திகள், 65 புகைப்படங்கள் மற்றும் பல ஆடியோ, வீடியோ அழைப்புகள் பரிமாறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அலுவலகத்திற்குள் செல்போன் எடுத்துச் சென்றபோது பிடிபட்ட அந்த அதிகாரி, அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதங்களாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா மற்றும் ராணுவ ரகசியங்கள் எந்த அளவிற்குக் கசிந்துள்ளன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
