LATEST NEWS
இம்ரான் கானுக்கு மாரடைப்பு அபாயமா.. இருள் சூழும் புஸ்ரா பிபியின் கண்கள்.. சிறைக்குள் நடக்கும் மர்மம் என்ன…!!
சிறைச்சாலையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் தலைமை நீதிபதிகளுக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில், தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், இது உயிருக்கே நேரடியான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்படுவதால் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருவதாகவும் அவர் அதில் வேதனை தெரிவித்துள்ளார்.
தனக்கு மாரடைப்பு அல்லது மூளைக்க கசிவு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளதாகவும், தனது இரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். மேலும், தனது மனைவியான புஸ்ரா பிபியும் உரிய கண் சிகிச்சையின்றி பார்வையிழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும், மனிதநேய அடிப்படையில் தனக்கு நீதி வழங்குமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தானும் தனது மனைவியும் உயிர்வாழத் தேவையான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதற்காகவே இந்த கடிதத்தை எழுதுவதாகவும், தாமதமின்றி தனக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். தான் உயிருடன் இருந்தால் மட்டுமே தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்க முடியும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
