LATEST NEWS
“என் பெற்றோர் எங்க அனுப்பிருக்காங்க பாருங்க” முதலிரவு அன்றே மாதவிடாய்… மதுபோதையில் கணவன் செய்த வெறிச்செயல் – கதறி அழும் மணப்பெண்ணின் வீடியோ வைரல்..!!
திருமணமாகிப் புகுந்த வீட்டிற்குச் சென்ற இளம்பெண் ஒருவருக்கு, முதலிரவு அன்றே கணவனால் கொடூரமான தாக்குதலும் பாலியல் வன்கொடுமையும் நேர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் வீட்டை விட்டுப் புகுந்த வீட்டிற்கு வந்த அந்தப் பெண்ணிற்கு, முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்து கடும் ஆத்திரமடைந்த மணமகன், மதுபோதையில் அந்தப் பெண்ணைக் கடுமையாகத் தாக்கியதுடன், அவரது விருப்பத்திற்கு மாறாக இரவு முழுவதும் கட்டாயப்படுத்தித் தனது இச்சைக்குப் பலியாக்கியுள்ளார். கணவனின் இந்தக் கொடூரச் செயலால் அந்தப் பெண் மிகுந்த அச்சத்திற்கும் சொல்லொண்ணாத் துயரத்திற்கும் ஆளாகியுள்ளார்.
மறுநாள் காலையில் கதறி அழுதபடியே வீடியோ ஒன்றை வெளியிட்ட அந்தப் பெண், “என் பெற்றோர் சந்தோஷமாக இருப்பார்கள், என்னை எங்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்? இரவு முழுவதும் என்னைத் தனது இச்சைக்குப் பலியாக்கிவிட்டார்” என்று வேதனையுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
