“இவர் நிஜத்துலயும் கொடூரமானவரா..?” எஜமான் படத்துல நெப்போலியன் பண்ண அந்த ஒரு விஷயம்… கல்யாணமே வேணாம்னு சொன்ன மனைவி.!! – cinefeeds
Connect with us

CINEMA

“இவர் நிஜத்துலயும் கொடூரமானவரா..?” எஜமான் படத்துல நெப்போலியன் பண்ண அந்த ஒரு விஷயம்… கல்யாணமே வேணாம்னு சொன்ன மனைவி.!!

Published

on

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் நெப்போலியன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்ததுடன், நடிப்பைத் தாண்டி அரசியலிலும் ஈடுபாடு காட்டினார். பின்னர் பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப அரசியலில் இருந்து விலகி, மீண்டும் முழுமையாகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

நடிகர் நெப்போலியன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘எஜமான்’ படத்தில் வல்லவராயன் என்ற பெயரில் மிகவும் கொடுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினியைப் பழிவாங்குவதற்காக, மீனாவின் கருவில் இருந்த குழந்தையை விஷம் வைத்து அழிக்கும்படியும் அவர் நடித்திருப்பார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், நெப்போலியனைப் பெண் பார்க்கச் சென்றபோது அவரது மனைவி இப்படத்தைப் பார்த்துள்ளார்.

Advertisement

திரைப்படத்தில் குழந்தையைக் கருவிலேயே கொலை செய்வது போல் கொடூரமாக நடித்திருந்ததைக் கண்ட அவரது மனைவி, அவரைத் திருமணம் செய்துகொள்ள ஆரம்பத்தில் மறுத்துள்ளார். பின்னர் பெண்ணின் தந்தை, “அவர் படத்தில் அப்படி நடித்துள்ளார், ஆனால் நிஜத்தில் மிகவும் நல்ல குணம் கொண்டவர்” என்று விளக்கியுள்ளார். அதன் பின்னரே ஜெயசுதா இவர்களின் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததாகவும், திருமணத்திற்குப் பின்னரே தங்களுக்குள் காதலும் மலர்ந்ததாகவும் நெப்போலியன் ஒரு நேர்கானலில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in