“என் 2 பாட்டிலைக் குடிப்பியா…” போதையில் எகிறிய ஆத்திரம்.. அண்ணனைத் தீர்த்துக்கட்டிவிட்டு வாசலிலேயே தம்பி செய்த காரியம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் 2 பாட்டிலைக் குடிப்பியா…” போதையில் எகிறிய ஆத்திரம்.. அண்ணனைத் தீர்த்துக்கட்டிவிட்டு வாசலிலேயே தம்பி செய்த காரியம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மதுரை கருப்பாயூரணி அருகே மது பாட்டில்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில், உடன் பிறந்த அண்ணனை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓட முடியாமல் வீட்டு வாசலிலேயே போதையில் தூங்கிய தம்பியைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒத்தவீடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கணவரை இழந்த கருப்பாயி என்பவருக்கு அழகர் (30), கணேசன் என இரு மகன்கள் உள்ளனர். பெயிண்டரான அழகரும், கூலித் தொழிலாளியான கணேசனும் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இரவு வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது தம்பி கணேசன் வாங்கி வைத்திருந்த 4 மது பாட்டில்களில், அதிக போதையில் இருந்த அண்ணன் அழகர் 2 பாட்டில்களைக் குடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தம்பி கணேசன் அண்ணனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மோதல் முற்றிய நிலையில், கணேசன் வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து அழகரின் தலையில் பலமாகத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பிறகு தாக்குதலுக்குப் பயன்படுத்திய இரும்பு ராடை வீட்டிற்குள் மறைத்து வைத்த கணேசன், தானும் அதிக மதுபோதையில் இருந்ததால் அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாமல் வீட்டு வாசலிலேயே சுருண்டு தூங்கிவிட்டார்.

Advertisement

மறுநாள் காலை உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த தாய் கருப்பாயி திரும்பி வந்தபோது, மூத்த மகன் அழகர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அண்ணா நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அழகரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, வீட்டு வாசலில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், கொலைக்கு வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in