“உன் புருஷன் உடம்பில் பேய் இருக்கு…” சடங்கு என்ற பெயரில் பெண்ணை செய்து பூசாரி செய்த கொடூரம்.. நீதிமன்றத்தின் மரண அடி அதிரடி தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் புருஷன் உடம்பில் பேய் இருக்கு…” சடங்கு என்ற பெயரில் பெண்ணை செய்து பூசாரி செய்த கொடூரம்.. நீதிமன்றத்தின் மரண அடி அதிரடி தீர்ப்பு..!!

Published

on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பேய் ஓட்டுவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கோவில் பூசாரி ராஜேஷ் என்பவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு வர்க்கலா பகுதியில் உள்ள ஸ்ரீ வனமூர்த்தி பத்ரா தேவி கோவிலில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. தனது கணவரின் தீராத உடல்நலக் குறைபாட்டிற்குப் பரிகாரம் தேடி வந்த பெண்ணிடம், அவரது கணவர் உடலில் பேய் இருப்பதாகக் கூறி நம்ப வைத்த பூசாரி ராஜேஷ், சிறப்புச் சடங்குகள் என்ற பெயரில் தனிமைப்படுத்தி அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை வெளியே சொன்னால் விபரீதம் ஏற்படும் எனத் தொடர்ந்து மிரட்டி அப்பெண்ணைப் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார்.

பூசாரியின் தொடர் அச்சுறுத்தல்களால் மனமுடைந்த அந்தப் பெண், கடந்த 2016 ஏப்ரல் மாதம் துணிச்சலுடன் காவல் துறையில் புகார் அளித்தார். இதன் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பூசாரியைக் கைது செய்தனர். திருவனந்தபுரத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையில், நீதிபதி ஏ. ஷாஜஹான் குற்றவாளி ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்ததோடு, அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். பக்தி என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி அநீதி இழைக்கும் போலிப் பூசாரிகளுக்குப் பாடமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in