LATEST NEWS
“காஷ்மீர் முதலமைச்சரின் 2-வது திருமணம்…” 56 வயதில் புதிய வாழ்க்கை.. மணப்பெண் போட்ட செம கூல் பதிவு வைரல்..!!
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா (56) மற்றும் பிரபல மூத்த பத்திரிகையாளர் நிதி ரஸ்தான் (49) ஆகியோரின் திருமணம், இருவீட்டாரின் முன்னிலையில் டெல்லியில் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நேற்று முதல் ஒரு புதிய பயணம் தொடங்கியது!” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் நிதி ரஸ்தானும் தனது எக்ஸ் பக்கத்தில் “இட்ஸ் டன், புரோ!” என்று ஓமர் அப்துல்லாவை டேக் செய்து தங்களது திருமணத்தை நெகிழ்ச்சியுடனும் கலகலப்பாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் மனைவி பாயல் அப்துல்லாவுடனான விவாகரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த மூன்று மாதங்களிலேயே ஓமர் அப்துல்லாவின் இந்த இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 1994-ல் திருமணமான ஓமர் – பாயல் தம்பதியினர் 2009 முதல் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜூலை 31, 2026 அன்று பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். தற்போது தங்களது புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மற்றும் நிதி ரஸ்தான் தம்பதியினருக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
