“எங்க அப்பாகிட்டயே வம்பு பண்ணுவியா…?” தட்டிக்கேட்ட மகன்களுக்கு நேர்ந்த விபரீதம்.. இறுதிச்சடங்கில் நடந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“எங்க அப்பாகிட்டயே வம்பு பண்ணுவியா…?” தட்டிக்கேட்ட மகன்களுக்கு நேர்ந்த விபரீதம்.. இறுதிச்சடங்கில் நடந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

திருப்பத்தூர் அருகே இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஏற்பட்ட முன்விரோதத் தகராறு பயங்கர மோதலாக மாறியதில், ஆனந்தராஜ் என்ற இளைஞர் இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுமாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னக்கண்ணு சின்னதம்பி என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த சம்பத் மற்றும் சர்வேசன் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்கனவே மதுக்கடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளது. தகவலறிந்து அங்கு வந்த சம்பத்தின் மகன்களான ஆனந்தராஜ், அருண் மற்றும் அண்ணன் மகன் விஷ்ணு ஆகியோர் தங்களது தந்தையிடம் தகராறு செய்தது குறித்து சர்வேசனிடம் கேட்டுள்ளனர்.

இந்தக் கேள்வி இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான கைகலப்பாக மாறியுள்ளது. இதில் சர்வேசன், அவரது சகோதரர் தேவராஜ் மற்றும் தேவராஜின் மகன் திலீப்குமார் ஆகியோர் ஒரு தரப்பாகவும், ஆனந்தராஜ், அருண், விஷ்ணு ஆகியோர் மற்றொரு தரப்பாகவும் மாறி கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலில் விஷ்ணுவின் தலையில் கத்திக்குத்து விழுந்து பலத்த காயமடைந்த நிலையில், ஆனந்தராஜ் இரும்பு ராடால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

Advertisement

அங்கிருந்தவர்கள் மீட்டுக் காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆனந்தராஜைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விஷ்ணுவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கொடூரச் சம்பவம் குறித்துத் திருப்பத்தூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து சர்வேசனைப் பிடித்து விசாரணை நடத்தி வரும் அதே வேளையில், தலைமறைவாக உள்ள தேவராஜ் மற்றும் அவரது மகன் திலீப்குமார் ஆகிய இருவரையும் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in