CRIME
“கூடவே இருந்து குழிபறித்த தோழி..!” கடன் தொல்லையால் தோழிக்கு துரோகம் செய்த பெண்.. போலீசாரின் அதிரடி கைது.. பரபரப்பு சம்பவம்..!!
உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராதூனைச் சேர்ந்த பூஜா தாப்பா என்ற பெண், தனது கடுமையான கடன் சுமைகளைத் தீர்ப்பதற்காகத் தனது நெருங்கிய தோழியான மீனா தாப்பாவின் வீட்டிலேயே புகுந்து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது வீட்டில் நகைகள் திருடுபோனதை மீனா தாப்பா கண்டறிந்த உடனே, அவரது முதல் சந்தேகம் பூஜா தாப்பாவின் மீதுதான் விழுந்தது. ஏனெனில், மீனாவின் வீட்டில் நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன மற்றும் என்னென்ன பொருட்கள் உள்ளன என்ற அனைத்து ரகசியங்களும் அவரது தோழியான பூஜாவிற்கு மட்டுமே தெரிந்திருந்தது.
மீனா தாப்பா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கியபோது, மீனாவின் சந்தேகம் முற்றிலும் உண்மை என்பது நிரூபணமானது. இதையடுத்து, உடனடியாகச் செயல்பட்ட போலீசார் பூஜா தாப்பாவை அதிரடியாகக் கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட அனைத்து நகைகளையும் பத்திரமாக மீட்டனர். பணக் கடனுக்காகப் பெத்த தாயைப் போல நம்பிய தோழியின் வீட்டிலேயே ஒரு பெண் கைவரிசை காட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
