CRIME
அதிர்ச்சி.. காணாமல் போன சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்.. தந்தையின் கொடூர முகத்தைக் கிழித்த 16 வயது மகள்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் காணாமல் போன 16 வயது சிறுமியை இமாச்சலப் பிரதேசத்தில் மீட்ட காவல்துறையினரின் விசாரணையில், அவளது மாற்றாந்தாய் தந்தை சச்சின் குமார் அவளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தந்தையின் இந்தத் தொடர் கொடூரத் தொல்லையைத் தாங்க முடியாமல், அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டிற்குத் தப்பியோடி அடைக்கலம் புகுந்துள்ளார்.
சிறுமியின் புகாரைத் தொடர்ந்து, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த குற்றவாளியான மாற்றாந்தாய் தந்தை சச்சின் குமாரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தந்தையே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் ஹரித்வார் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
