CRIME
“மது போதையில் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் கவுன்சிலர்.. சகோதரனுடன் சேர்ந்து அக்கா போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. கள்ளத்தொடர்பால் நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வரில் பிரபல வழக்கறிஞரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான தீரேந்திர பரிஹார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை அதிரடியான உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட லதா பண்டாரி என்பவருக்கும் வழக்கறிஞர் தீரேந்திர பரிஹாருக்கும் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு நெருக்கம் வளர்ந்துள்ளது. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவர்களது பழக்கம் ஓரளவுக்குக் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி வழக்கறிஞர் தீரேந்திர பரிஹார் கடுமையான மது போதையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதற்கு அந்தப் பெண் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததுடன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வழக்கறிஞரின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரக் கொலைக்குப் பிறகு, அந்தப் பெண் சடலத்தை யாருக்கும் தெரியாமல் தனது படுக்கைக் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார். மறுநாள், தனது சகோதரரான திரிபுவன் சிங் பிஷ்ட் என்பவரின் உதவியுடன், சடலத்தை ஒரு வாகனத்தில் எடுத்துச் சென்று பாகேஷ்வர்-கிரிச்சினா மோட்டார் சாலையில் உள்ள துனாய் பாண்ட் என்ற இடத்திற்கு அருகே உள்ள ஆழமான பள்ளத்தாக்கிலிருந்து கீழே ஓடும் நதியில் வீசி எறிந்து மறைத்துள்ளனர். காணாமல் போன வழக்கறிஞர் குறித்துப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனைத் தொடர்ந்து, கொலைக் குற்றவாளியான லதா பண்டாரி மற்றும் சடலத்தை மறைக்க உதவிய அவரது சகோதரர் திரிபுவன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
