CRIME
அய்யயோ.. 20 மீட்டர் ஆழத்தில் பாய்ந்த கார்.. ஆற்றுக்குள் சுழன்றடித்த இன்னோவ.. 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்..!!
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியின் கங்கனானி பகுதியில், கர்ம்குண்டிற்கு சற்று முன்னதாக கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து அடித்துச் செல்லப்பட்ட கொடூர விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தப்ரானி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த சொகுசு கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 மீட்டர் ஆழத்தில் பாய்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, காரின் அருகே இருந்து நான்கு பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
இந்த விபத்தின் போது காரில் இன்னும் எத்தனை பேர் பயணித்தார்கள் என்ற முழுமையான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆற்று வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருப்பதால், காரில் பயணித்த மற்ற நபர்கள் எவரேனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புக் குழுவினர் ஆற்றில் தொடர்ந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே காரில் பயணித்த நான்கு பேர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பலியான இந்த சோகச் சம்பவம் உத்தரகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
